சிறுதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டாக கட்டுரை போட்டியொன்று திருகோணமலை மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே சிறுதொழில் முயற்சி திணைக்களத்தினால் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர் பங்குகொண்டனர்
இவர்களில் வெற்றிபெற்ற மாணவருக்கு விருது வழங்கும் விழாவானது 2023/12/29 ஆம் நாள் வெள்ளிக்கிழமை திருக்கோணமலை மாவட்ட செயலகத்தில் (கச்சேரி) நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ஹெட்டியாராச்சி, திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கபில நுவன் அத்துகொரல, திருக்கோணமலை மாவட்ட நலன்புரி சங்க தலைவர் திரு.எஸ் .குகதாசன், மத்திய வங்கி கிழக்கு மாகாண முகாமையாளர் திரு.பிரபாகரன் மற்றும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments