Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

17 வயது சிறுமி துஷ்பிரயோகம் 27 வயது இளைஞனுக்கு விளக்கமறியல்


திருகோணமலை-
கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி 08ம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் இன்று (30) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கோமரங்கடவல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-குறித்த 17 வயதுடைய சிறுமி  புதிய ஆடை ஒன்றினை தைப்பதற்காக  சுகாதார வைத்திய பணிமனைக்கு அருகில் உள்ள ப
(டைலர் சொப்) கடைக்கு சென்றபோது கடையில் குறித்த இளைஞர் இருந்ததாகவும் புதிய ஆடையை தைத்து தருவதாக கூறி சிறுமியை தைத்து தரும் வரை இருக்குமாறு கூறியதாகவும் இதனை அடுத்து சற்று நேரத்தின் பின் கடையை மூடிவிட்டு உள்ளே சிறுமியை  துஷ்பிரயோகம் செய்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது  செய்யப்பட்ட இளைஞனை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போதே எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி வரை விளக்கம்மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments