Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

சாரதிக்கு தூக்கம்-திருகோணமலையில் விபத்து


திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் இன்று (06) இடம்பெற்ற விபத்தில் இரு சாரதிகளும் காயமடைந்துள்ளனர்.


ஹொரவ்பொத்தானை பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த  பவுசரும், திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சீமெந்து லொறியும் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் இரண்டு சாரதிகளும் காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் கலக்கம் காரணமாக லொறி வீதியின் குறுக்கே சென்றதால் முன்னே நோக்கி வருகை தந்து கொண்டிருந்த பவுசர் விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகிறது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ-பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments