இஸ்ரேல் -பலஸ்தீன் மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும், பலஸ்தீனத்தில் இடம்பெறும் படுகொலைகள், வைத்தியசாலை மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மூதூரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மூதூரில் இன்று (20) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியிலிருந்து நடைபவணியாக வந்து மூதூர் பிரதான வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பலஸ்தீனத்திற்கு ஆதரவான சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூதூர் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து பலஸ்தீன மக்களுக்கான துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
No comments