சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வரும் முதியவர்களை கௌரவிக்கும் நோக்கில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட செயலகமும் ,காப்போம் அமைப்பும் இணைந்து புனித யோசப் முதியோர் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்களை கௌரவித்தனர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி , மேலதிக மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் ,கிழக்கு மாகாண சமூகசேவை திணைக்களத்தின் தொழில்சார் பொறுபதிகாரியும், இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண அதிகாரியுமான திருமதி ஜே. சுகந்தினி
மற்றும் முதியோர் மேம்பாட்டு அதிகாரி திரு.இர்பான், சமூகசேவை அதிகாரி திரு.பிரணவன் ஆகியோர் உட்பட காப்போம் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் இதன் போது கலந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் 100 முதியவர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
No comments