திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவு உட்பட்ட பன்குளம் பகுதியில் கூரை மேல் ஏறிய நபர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
இச்சம்பவம் இன்று (07) மாலை இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த அமரசிங்கம் தேவதாஸ் (68வயது) எனவும் தெரியவருகிறது.
மழை பெய்தமையினால் கூரை மேல் ஏரி கூரையை திருத்திக் கொண்டிருந்த போது தவறி விழுந்து கீழே கிடந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன்,
உடல் கூற்று அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
குறித்த மரணம் தொடர்பில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments