திருகோணமலை-கிளிவெட்டி மகா வித்தியாலயத்தினால் தயாரிக்கப்பட்டு திரு.புஹாரி நளீர் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான "பள்ளிக்கூடம் " எனும் குறுந்திரைப்படத்தில் நடித்த செல்வி.கோ.கம்சத்வனி அவர்களுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது குவியம் அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது.
அவ்விருது மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.Z.M.M.நளீம் அவர்களினால் (07) வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இக்குறுந்திரைப்படமானது சமூகத்தில் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் மாணவர்கள் மத்தியில் ஒழுக்க விழுமியங்களை வளர்த்தெடுக்கும் நோக்கிலும் மற்றும் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலும் திரு.பா.கோணேஸ்வரராசா அதிபர் மற்றும் இயக்குனரான திரு. புஹாரி நளீர் ஆகியோரின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நடிப்பில் தயாரிக்கப்பட்டமை குறிப்பித்தக்கதாகும்.
No comments