Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கிழக்கில் மூதூர் கல்வி வலயம் முதலிடத்தில்

 


கிழக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் அடிப்படையில் மூதூர் வலயமானது முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 


தற்போது வெளியாகியுள்ள 2022ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணங்களில் உள்ள 17 கல்வி வலயங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் மூதூர் வலயமானது முதலாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மூதூர் வலயத்தில் இருந்து 617 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 512 மாணவர்கள் சித்தியடைந்திருந்தார்கள் இது 83 வீதமான சித்தியாகும். 78.8 வீதமான சித்தியினைப் பெற்று கிண்ணியா வலயமானது இரண்டாம் இடத்திலும், 77.7 வீதமான சித்தியினைப் பெற்று மட்டக்களப்பு மேற்கு வலயமானது 3ம் இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து மட்டக்களப்பு மத்தி, திருகோணமலை, மகாஓயா, பட்டிருப்பு, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, திருக்கோவில், தெகியத்தகண்டிய, சம்மாந்துறை, கல்முனை, திருகோணமலை வடக்கு, கல்குடா, அம்பாறை மற்றும் கந்தளாய் ஆகிய வலயங்கள் 4ம் இடத்தில் இருந்து 17ம் இடங்கள்வரை தரப்படுத்தப்பட்டுள்ளன.

No comments