Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

வாகரை பிரதேசத்தில் ஜனநாயக பங்குதாரர்களால் பஸ் தரிப்பிடம் திறந்து வைப்பு



AHRC நிறுவனம் ஜனநாயக பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சபைகள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை 45 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றிணைப்பதன் ஊடாக சமுகத்தில் இனம்காணப்படும் பிரச்சினைகளுக்கு  தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


இவ்வாறான கலந்துரையாடலில் முன்மொழியப்பட்ட கோரிக்கைக்கு  அமைய AHRC நிறுவனம், பிரதேச சபை மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து வாகரை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் முன்பாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பஸ் தரிப்பிடத்தால் மக்கள் போக்குவரத்து சிரமங்களை அனுபவித்து வந்த நிலையில்

இந்த பஸ் தரிப்பிடம் மக்கள் கோரிக்கைக்கு அமைய புனரமைப்பு செய்யப்பட்டு இன்று (13.09.2023) ஜனநாயக பங்குதாரர்கள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.




No comments