Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் கௌரவிப்பு

 


திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்  பரீட்சையில் சித்தியடைந்த தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி மோ.அபிஸ்ரீ  அவர்கள் இன்று (04/09/2023) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்.


திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையிலும் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் மோ.அபிஸ்ரீ அவர்களுக்கு மேலதிக பிரதிலாபக் கொடுப்பனவாக ரூபா 14,500 பெறுமதியான காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் இவ்வாறான பல  விடயங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி பா.சஜிக்கா மற்றும் மாணவியின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

No comments