திருகோணமலையில் திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி திருகோணமலை கொழும்பு வீதியினூடாக திலீபனின் உருவச் சிலையை கொண்டு வரும்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 14 பேருக்கு தாக்குதல் நடத்தப்பட்டது இந்நிலையில் சந்தேகத்திற்கு நேரில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ஆறு பேரையும் கடந்த பதினெட்டாம் திகதி சீனக்குடா பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதே நேரம் குறித்த வழக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் பத்தாம் மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளை இட்டார்.
No comments