தென்னமரவடி மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

 




திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தென்னமரவடி கிராமத்தில் 12 மீனவப் பெண்களுக்கள் மற்றும் ஆண்களுக்கான மீன்பிடி உபகரனங்கள் AHRC மற்றும் PCCJ நிறுவனத்தினால் இன்று (05.09.2023) வழங்கி வைக்கப்பட்டன.


கிழக்கு மாகாணத்தில் நிலைபேறான வாழ்வாதார உதவிகளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்காக AHRC நிறுவனமானது வழங்கி ஊக்குவித்து வருகின்றது. இச் செயற்திட்டத்தின் ஊடாக இன்று (05.09.2023) குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவின் கீழ் உள்ள தென்னமரவடி கிராமத்தில் இயங்கும் மீனவ கூட்டுறவு சங்கத்தின் ஊடாக செயற்பட்டு வரும்  மீனவப் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ரூபா 27 இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரனங்கள் வழங்கி வைக்கப்பட்டு , மீனவர்களுக்கான மீன் வாடி திறந்து வைக்கப்பட்டது 
குச்சவெளி – தென்னமரவடி கிராமத்தின் மீனவர்கள் ஒன்றுகூடும் மீன் வாடி கட்டிடத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச செயலாளர் திரு. குமாரசிங்கம் குணநாதன் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் மற்றும் AHRC நிறுவனதின் இணைப்பாளர் க.லவகுசரா, பிரதி இணைப்பாளர் அ.மதன், PCCJ நிறுவனத்தின் இணைப்பாளர் த.கிரிசாந் மற்றும் திட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் இக்கிராமத்தில் காணப்படுகின்ற காணி உட்பட ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக கிராம சிவில் அமைப்புக்கள், பிரதேச மக்களால் பிரதேச செயலாளரிடம் முன்வைத்தனர்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال