Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் 01ம் 02ம் இடத்தைப் பெற்ற மாணவி டேகா உமாசங்கர், ஸாஹிரா கல்லூரி மாணவி ஜகுபர் றிஸ்னி


திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி டேகா உமாசங்கர்  முதலாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.


எதிர்காலத்தில் சிறந்த வைத்திய நிபுணராக வருவதற்கு ஆசைப்படுவதாகவும் தனக்கு கற்பதற்கு உதவி அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவி ஜகுபர் றிஸ்னி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

தந்தை கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் விஞ்ஞான உயிரியல் பிரிவில் கல்வி  கற்று வந்த நிலையில் மாவட்டத்தில்  இரண்டாம் இடத்தைப்  பெற்றுள்ளேன்.

எனது வெற்றிக்கு உதவிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் தனது கல்விக்காக உதவிய  அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் பெண் நோயியல் வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும் தெரிவித்தார்.

No comments