Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

பாக்கு நீரினை கடப்பதற்காக தயாராகும் திருகோணமலை மாணவர்கள்!

 


பாக்கு நீரினை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கான நீச்சல் போட்டி இன்று (01)  திருகோணமலையில் நடாத்தப்பட்டது.


TRINCOAID ஏற்பாட்டில் யானா நீச்சல் பாடசாலையில் பயிற்சி பெறும் மாணவர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் பாக்கு நீரினை கடப்பதற்காக தயாராகும் நிலையில் இப்போோட்டி நடாத்தப்பட்டது.

திருகோணமலை வைத்தியசாலையை அண்மித்த கடற் பகுதியிலிருந்து கோனேஸ்வரர் ஆலயம் அருகாமையின் ஊடாக முத்துமாரியம்மன் கோயில் கடற்கரைக்கு மாணவர்கள் நீந்தி சென்றுள்ளனர்.

பதினாறு வயதுக்கு கீழ் பட்ட 13 சிறார்கள் இந்த நீச்சல் போட்டியில் பங்குபற்றியதுடன் 13 கிலோமீட்டர் தூரத்தை 5 மணித்தியாலங்களில் நீந்தியுள்ளனர்.

காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த நீச்சல் போட்டியில் ஆறு சிறார்கள் 13 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

சிம்மர் என்ற சிறுவன் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.











No comments