திருகோணமலை- மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் கண்பார்வை இழந்த நோயாளியொருவர் சிகிச்சை பெற்று வந்த அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ வீரர் அவருக்கு உணவு ஊட்டுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
மஹதிவுல்வெவ -புபுதுபுர பகுதியில் வசித்து வரும் அமரசிங்க (67வயது) என்பவர் பல வருடங்களாக கண் பார்வையை இழந்து மனைவியை விட்டுப் பிரிந்து தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் சுகயீனம் காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மல்லாவி,ஆலங்குளம் 17 CLI இராணுவ முகாமில் வசித்து வரும் தனுஷ்க பியலால் திசாநாயக்க (34வயது) இராணுவ வீரர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வயோதிபரை பார்வையிடுவதற்காக வீட்டில் இருந்து வருவதற்கு தாமதம் ஏற்படுவதாகவும்,இதனை அடுத்து வைத்தியசாலை சிற்றூழியர்கள் கவனிப்பதைப் போன்று குறித்த இராணுவ வீரர் தமது தந்தைக்கு செய்யும் பணிவிடை போல குறித்த வயோதிபருக்கு பணிவிடை செய்து வருகின்றமை நோயாளர்கள் மத்தியிலும், வைத்தியசாலை நிர்வாகம் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர்கள் எதிர்காலத்தில் இன்னும் வளர வேண்டுமென இறைவனை பிரார்த்திப்பதோடு, இவ்வாறான செயற்பாடுகளை வரவேற்பதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
No comments