Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை!


திருகோணமலை-அலஸ்தோட்டம்  நாகம்மாள் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக   திருகோணமலை மாவட்ட  நலன்புரிச் சங்கத்தால் 230000.00 ரூபா நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.


 திருகோணமலை மாவட்ட  நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன் இதற்கான காசோலையை மேற்படி அறநெறிப் பள்ளித் தலைவர் திரு.சுந்தரலிங்கத்திடம் வழங்கி வைத்தார். 

தமிழ்ப் பண்பாடு மற்றும் சைவநெறியைப் பேணிப் புரக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் அறநெறிப் பாடசாலைகளில் அலஸ்தோட்டம் நாகம்மாள் அறநெறிப் பள்ளி முதன்மையான தொன்றாகும். 

 இந்த அறநெறிப் பாடசாலையில் 125 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் இவர்களுக்குச் சீருடை இல்லாத குறையை நீக்கும் பொருட்டாகத் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் சீருடை கொள்வனவுக்காக 230000.00  ரூபாவை இன்று (18) நாகம்மாள் அறநெறிப் பாடசாலைக்கு வழங்கியது.


திருகோணமலை மாவட்ட  நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன் இதற்கான காசோலையை மேற்படி அறநெறிப் பள்ளித் தலைவர் திரு.சுந்தரலிங்கம் அவர்களிடம் வழங்கி வைத்தார். 

குச்சவெளியைச் சேர்ந்த  திரு.திருச்செல்வம் பிரபாகரன் நினைவாக  இச்சீறுடைக்கான காசோலை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.








No comments