Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

ஞானோதயம் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல் வழங்கி வைப்பு!

 


திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத்  தோற்றும் மாணவரது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு குச்சவெளிக் கோட்டத்தில் உள்ள திரியாய்  மகா வித்தியாலயம், கும்புறுபிட்டி மெதடிஸ்த மிஷன் பாடசாலை, கும்புறுபிட்டி கனிஷ்ட வித்தியாலயம், நாவற்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவருக்கு ஒவ்வொருவருக்கும் 1680 ரூபா பெறுமதியான ஞானோதயம் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல் இன்று (13.06.2023)  வழங்கப்பட்டது. 


திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன் இவற்றை வழங்கி வைத்தார்.

 

கும்புறுபிட்டி வட்டார முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான திரு.ஜெயகாந்தன், திரு.புஸ்பகாந்தன் ஆகியோரும் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

No comments