திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலை வாய்ப்பு பிரிவு, திறன் மற்றும் தொழிற்கல்வி பிரிவு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் தொழில் மற்றும் தொழிற்கல்வி சந்தையானது எதிர்வரும் (09/05/2023) செவ்வாய்க்கிழமை தி/பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம கலந்து கொள்ளவுள்ளார்.
இங்கு உள்ளூர், வெளியூர் தொழில் தருனர்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் 50 இற்கும் மேற்பட்ட அரச, தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இவ் மாபெரும் தொழில் மற்றும் தொழிற்கல்வி சந்தையானது இளைஞர் , யுவதிகள், தொழில் தேடுபவர்கள், தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பான தகவலை பெற விரும்புவர்கள்,பாடசாலை மாணவர்கள், பாடசாலையை விட்டு இடை விலகியோர், என அனைவரும் பயன் பெறும் வகையில் நடைபெறவுள்ளது.
No comments