(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டம் கந்தளாய்-அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (07) 12.55 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
கல் ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் கித்துல்உதுவ பகுதியில் ரயில் பெட்டியொன்று தடம் புரண்டதாகவும் தெரிய வருகின்றது.
இவ்விபத்தில் காயமடைந்த 17 பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் மூன்று ஆண்களும், ஒரு சிறுவனும் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
No comments