அனுராதபுரம்- ஹொரவ்பொத்தான குளத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து
குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம்் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தான-கம்மெத்த கம்மானய பகுதியைச் சேர்ந்த ரன்ஹாமிகே வணிகசேகர (62வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது இவர் இக்குளத்தில் தொடர்ச்சியாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் சில நேரங்களில் மது அருந்துவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனாலும் இவருடைய மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபடவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.
No comments