திருமலை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் சாதாரண தரத்தில் வரலாற்றுச் சாதனை...




திருகோணமலை சாஹிரா தேசிய கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 50 மாணவர்களில் நாற்பத்தி ஒன்பது மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஏ.எஸ் அலி சப்ரி அவர்கள் தெரிவித்தார்


இவர்களுள் 03 மாணவிகள் உட்பட ஒரு மாணவன் 9ஏ சித்திகளை பெற்று  கல்லூரி வரலாற்றில்  சாதனை படைத்துள்ளதாக தெரிவித்த கல்லூரியின் அதிபர்  மேலும் 5 பாடங்களுக்கு மேலாக ஏ சித்திகளை பெற்ற 13 மாணவர்கள் அடங்குவதாகவும் தெரிவித்தார்


நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் - 19 கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலையில் எம்.ஏ.எம்.அன்வருள் அப்சான்,கே.சீமா சப்நப்,எம்.என்.பாத்திமா நப்ளா மற்றும் எஸ்.பாத்திமா நஸ்ரின் ஆகிய மாணவ மாணவிகளே இவ்வாறு 9ஏ சித்திகளை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய கல்லூரியின் அதிபர்


இவ்வாறான அடைவு மட்டத்தை அடைந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயம் என்றும் இவ்வாறன அடைவு மட்டத்திற்கு  அயராது பாடுபட்ட கல்லூரியின் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் உயர்தரத்தில் கல்வி கற்க தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரியின் அதிபர் அலி சப்ரி தனது வாழ்த்தினையும் தெரிவித்தார்.

Previous Post Next Post

نموذج الاتصال