(அப்துல்சலாம் யாசீம்)
நாட்டில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் நகர் பிரதேசத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களை தற்கலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக திருகோணமலை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது
இன்று திங்கட்கிழமை (16) திருகோணமலை பொது மீன் சந்தையில் இதற்கான தெளிவூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த திருகோணமலை வர்த்தக சங்கத்தின் உப தலைவர் நாளை 17 ஆம் திகதி முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை திகோணமலை நகரிலுள்ள அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் தவிர்த்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்கள்,சந்தை,மீன் சந்தை என்பன மூடுவதத்திற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இவ் நடவடிக்கை மாவட்டத்தின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்த திருகோணமலை வர்த்தக சங்கத்தின் உபதலைவர் இது தொடர்பாக எழுத்துமூல அறிக்கை ஒன்று திருகோணமலை நகர சபை மற்றும் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திலும் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
மேலும் இவ் தெளிவூட்டும் நிகழ்வில் திருகோணமலை வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் மத தலைவர்கள் கலந்தது கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments