Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

ஒக்சிசன் ரெகுலேடர்கள் வழங்கி வைப்பு


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-மூதூர் தள வைத்தியசாலை நோயாளிகளின் நலன் கருதி நோயாளிகளுக்கு ஒக்சிசன் வழங்க பயன்படும் 14 அத்தியாவசிய மருத்துவ ஒக்சிசன் ரெகுலேட்டர்கள் வழங்கி வைக்கப்பட்டது.


 இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியின் திருகோணமலை பிரிவினால் இன்று (05) பழுதுபார்த்து மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டன.


இந்த ஒட்சிசன் ரெகுலேடர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் பொறியாளர் மகேஷ் சதுரங்க மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பீ.கயல்விழியிடம் கையளித்தார். 


ஒரு ஒக்சிசன்  ரெகுலேட்டர் ஒன்றின் பெறுமதி 48000/= ரூபாய் எனவும் 12 ஒக்சிசன் ரெகுலேடர்கள்  576000/= ரூபாய் எனவும் தெரியவருகின்றது.


No comments