Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கு கட்டில்களை வழங்கிய வைத்தியர் புத்தி ஜயசிங்க


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமான  கோமரங்கடவல பிரதேசத்தில் கொரோணா தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள குறைபாடுகளை போக்கும் முகமாக மாத்தறையைச் சேர்ந்த வைத்தியர் டொக்டர் புத்தி ஜயசிங்க 13 கட்டில்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.


ஒரு கட்டிலின் விலை சுமார் 4 லட்சம் பெருமதி எனவும் தனது முயற்சியாலும் தனது நண்பர்களுடன் இணைந்து இந்த வைத்தியசாலையின்  குறைபாடுகளை நீக்கும் நோக்குடன் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

 தன்னை விட இந்த சமூகம் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இத்தகைய சேவையை செய்வதாகவும், திருகோணமலை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகளை எதிர்காலத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து முன்னெடுக்க உள்ளதாகவும் டொக்டர் புத்தி ஜயசிங்க  குறிப்பிட்டார்.


பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த கட்டில்கள் எல்லோருக்கும் பயன்படப் போகிறது என்பதையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் எதிர்காலத்தில்நோயாளர்களுக்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க அனைத்து வைத்தியர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையை அழகுபடுத்தும் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டு வருகின்றமையும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

இவ்வைத்தியரைப் போன்று அனைத்து திணைக்களங்கள அதிகாரிகளும் சிறந்த முறையில் செயல்பட முன்வரவேண்டும் எனவும் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

No comments