(அப்துல்சலாம் யாசீம்)
அகில இலங்கை ரீதியாக 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனடிப்படையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்கள் இணைந்து இன்று (03) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (03) பிற்பகல் 12 மணி தொடக்கம் ஒரு மணிவரை இடம்பெற்றது.
covid-19 தோற்று நோய் தொடர்பான முடிவுகளில் ஒருங்கிணைந்த தொழிற்சங்க குழுவையும் இணைத்தல் வேண்டும்.
வைத்தியசாலை பணிக்குழுவினருக்கு வங்கு தடையின்றி போதிய அளவு சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
வைத்திய சாலைகளில் உள்ள covid-19 கட்டுப்பாட்டு குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இணைத்துக் கொள்ளல் வேண்டும்.
பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கமைய கற்பிணி சுகாதாரத் துறைசார் பணி குழுவினருக்கு விசேட விடுமுறைக்கான சுற்றுநிறுபம் வெளியிட வேண்டும்.
போன்ற 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பொது வைத்தியசாலை மற்றும் மூதூர் தள வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலைகளில் இக்கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments