கொரோனா உலர் உணவுப் பொருட்கள் கொடுப்பதுபோல் சூட்டிங் எடுக்கப்பட்டது- கொடுக்கப்பட்டதா தெரியவில்லை-திருமலையில் சம்பவம்!
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா உலர் உணவுப் பொருட்கள் கொடுப்பதைப் போல சூட்டிங் எடுக்கப்பட்ட சீசீடி காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சியின் முக்கிய பதவிகளில் அங்கம் வகிப்பதாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று வந்த திருமலை துஷாந்தன் என்ற முகநூல் நபர் கொரோனா அச்சம் காரணமாக முடங்கி கிடக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வருவதாக வெளிநாட்டு உதவிகளை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த முகநூல் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களில் வழங்குவதாக உலர் உணவுப் பொருட்கள் கொடுப்பதுபோல் ஷூட்டிங் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றது.
ஆனாலும் முகநூல் திருமலை துஷாந்தன் தமிழரசுக் கட்சியில் முக்கிய அங்கம் வகிப்பதாகவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.
இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் எஸ்.குகதாஸனிடம் கேட்டபோது கட்சிக்கும்-திருமலை துஷாந்தன் என்பவருக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை எனவும் தமிழரசு கட்சியின் நிகழ்விற்கு வருகை தந்து முக்கிய பிரமுகர்களுடன் புகைப்படங்களை எடுத்து தங்களுடைய முகநூல் ஊடாக பதிவிட்டு வருவதாகவும் இவருடைய மோசடி அரசியல் செயற்பாட்டிற்கும் தமிழரசுக்கட்சியின் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். குகதாசன் தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் கட்சியை பயன்படுத்தி செயற்பாடுகளில் ஈடுபடும் இவ்வாறான போலி முகநூல் நபர்களை நம்ப வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments