(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈச்சத்தீவு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்ட நிலையில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (15) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பெர்ணாந்து அவர்களின் ஆலோசனைக்கு அமைய கிண்ணியா பொலிசார் கசிப்பு உற்பத்தி நிலையத்தினை சுற்றி வளைத்து சந்தேக நபரொருவரையும் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்து புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு மற்றும் கோடாத் திரவமும் அடங்கிய 7 பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,
இவைகளில் சுமார் 3 இலட்சத்து 60 மில்லி லீட்டர் கசிப்பு இருந்தாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோன அச்சம் காரணமாக மதுபான சாலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதனால் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments