Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு தேவையான கருவிகளை உடனடியாக வழங்கவும் -சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகளவிலான கருவிகள் இல்லாமையினால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், நோயாளர்களின் நலன் கருதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு தேவையான  கருவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கை கடிதத்தினை சுகாதார அமைச்சருக்கு சமூக அபிவிருத்தி கட்சி அனுப்பி வைத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை பொது வைத்தியசாலை மிக முக்கியமான வைத்தியசாலையாகும். 
இவ் வைத்தியசாலையில் பல பற்றாக்குறைகள் இருக்கின்ற போதிலும் தற்போதைய சூழ்நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அவசரமாக 22 விதமான கருவிகள் தேவைப்படுவதாக
சமூக அபிவிருத்தி கட்சியின் பொதுச்செயலாளர் குகதாஸ் பிரகாஷ் இன்று (31) மத்திய சுகாதார அமைச்சருக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இதனடிப்படையில் மாவட்டத்தில் கந்தளாய் வைத்தியசாலை கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளதால் அனைத்து நோயாளர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர். 

இருந்தபோதிலும் வைத்தியசாலைக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்த போது அதிதீவிர சிகிச்சைப் பரிவில் பாரிய பற்றாக்குறைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடிதத்தில் குறிப்பிடப்படுகின்ற 22 கருவிகளையும் உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments