Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 82 பேருக்கு கொரோனா!



(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இத்தகவலை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் இன்று (17) காலை 10.00 மணியளவில் வெளியிட்டுள்ளது.


திருகோணமலை மாவட்டத்தில் 3982 பேர் இன்று வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் 122 மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில்  கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலை மாவட்டத்தில் எதுவித மரணங்களும் இடம்பெறவில்லை எனவும் திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.


கிண்ணியா பிரதேசத்தில் 5 பேர் covid-19 தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குச்சவெளி பிரதேசத்தில் 19 பேரும் மூதூரில் 18 பேரும் தம்பலகாமத்தில் 26 பேரும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 14 பேரும் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.


இதேவேளை பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுமாறும், தொடர்ச்சியாக முகக் கவசங்களை அணியுமாறும், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



No comments