(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 367 கோவிட்-19 நோயாளிகள் இணங்காணப்பட்டுள்ளனர்.
இதில் ஆகக் கூடுதலாக 268 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஆகக்குறைவாக அம்பாறை சுகாதார பிரிவில் 14 பேரும் மற்றும் கல்முனையில் 45 பேரும் திருகோணமலையில் 40 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர். எம்.தௌபீக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கோவிட்-19 தொன்று தொடர்பில் இன்று (19) அவரிடம் கேட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் 5 மரணங்களும் திருகோணமலையில் இரண்டு மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் இவ்வாறு வெகு வேகமாகப் பரவும் தொற்றுநோய் கல்முனையிலும் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மற்றைய திருகோணமலை, அம்பாறை சுகாதார பிரிவுகளில் நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்தும் காணப்படுகின்றது.
இவ்வாறான அதிகரிப்புகளுக்கு பொதுமக்களின் பொடுபோக்கு தளமும் அனாவசியமான ஒன்று கூடல்களும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனைகள் மேற்கொள்ளாமல் வைத்தியசாலைகளுக்கு செல்லாமல் மறைந்து வீடுகளில் இருப்பதால் நோய் மற்றவர்களுக்கு அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவும் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
No comments