(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 3 பேர் மரணம் 22 பேருக்கு கொரோனா தொற்று என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் இன்று (16) காலை 10.00 மணியளவில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரைக்கும் 98 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கோவிட்-19 தொற்று இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் 3900 பேருக்கு கோவிட்-19 தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை 475 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறு ஆண்களும், 16 பெண்களும் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதனடிப்படையில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் 1230 பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 723 பேரும், கிண்ணியாவில் 468 பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 241 பேரும் மூதூரில் 433 பேரும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் பதவிசிறிபுர பகுதியில் 30 பேரும், கோமரங்கடவல பிரதேசத்தில் 63 பேரும் குச்சவெளியில் 299 பேரும், தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 152 பேரும் கந்தளாயில் 218 பேரும், சேருவில பிரதேசத்தில் 34 பேரும், ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் 9 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
No comments