(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்ட கோவிட் -19 இணைப்பாளராக டொக்டர் என்.ரவிச்சந்திரன் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்ற சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் முக்கியமான அமைப்புகளில் நிலவுகின்ற தேவைகளை கண்டறிந்து அதனை நிவர்த்திக்கும் வகையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தங்களுடைய பிரச்சினைகளை மாவட்ட இணைப்பாளரின் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது மின்னஞ்சல் மூலமாக அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் 0770450860 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது ravidssoorya@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தங்களுடைய பிரச்சினைகளை தெரியப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
No comments