Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கந்தளாயில் நேருக்கு நேர் மோதிய பவுசர்கள்

 


திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்

இரு பவுசர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்  பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இருவர் திருகோணமலை  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (07)
2 மணியளவில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87 ஆம் கட்டை சந்திப் பகுதியில் இடம்பெற்றது.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது-
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு எரிபொருட்களை ஏற்றிச் சென்ற பவுசர் வாகனமொன்றும், குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற பவுசர் வாகனமுமே இவ்வாறு மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இதில் 35 மற்றும் 46 வயது சாரதியொருவரும் உதவியாளர் ஒருவருமே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments