திருகோணமலை மாவட்டத்தில் தற்போது அதிகரித்துவரும் கொவிட் -19 காரணமாக நோயாளர்கள் திருகோணமலை செல்வதை குறைத்து வருகின்ற நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அதிகளவிலான நோயாளர்கள் வருகை தருவதாக தெரியவருகின்றது.
ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் தமிழ் மொழி தெரிந்த ஊழியர்கள் இல்லாமையினால் அப்பகுதியில் உள்ள நோயாளர்களும் இவ் வைத்தியசாலையை நாடி வருவதாகவும் தெரியவருகின்றது.
காரணம் அந்த வைத்தியசாலையில் தமிழ் மொழி பேசக்கூடிய ஊழியர்கள் இல்லாமையினால் மொழிப் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது .
இதனால் அப்பகுதியில் உள்ள யான்ஓயா,றத்மலை-100 ஏக்கர் மற்றும் ரொட்டவெவ,நொச்சி க்கும், சாந்திபுரம், ஜின்னா நகர்,பன்குளம், அவ்வை நகர் நாமல்வத்த போன்ற பகுதிகளைச்சேர்ந்த நோயாளர்கள் இவ்வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களில்
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் தமிழ் மொழி பேசக்கூடிய ஊழியர்கள் கடமையில் இருப்பதினால் நோயாளர்கள் தங்களுடைய நோய்களை தமிழில் சொல்கின்ற நேரத்தில் அதனை மொழிபெயர்த்து சிங்களத்தில் வைத்தியர்களுக்கு தெரிவிப்பதற்கு ஊழியர்கள் அங்கு காணப்படுகின்றனர்.
ஆனாலும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் வீதம் அதிகரித்து வருகின்ற நிலையில் ஊழியர்கள் குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் இதனால் தாமதம் ஏற்படுவதாகவும் நோயாளிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறிப்பாக கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதால் நோயாளர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கே வருகை தருவதாகும் தெரியவருகின்றது.
ஆகவே நோயாளர்களின் நலன் கருதி இரண்டு வைத்தியர்கள் கடமையில் இருக்கின்ற போதிலும் ஊழியர்கள் குறைவாக இருப்பதினால் மேலதிகமாக சிற்றூழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நோயாளிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments