(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில புலன் அத்துக்கோரலவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது கந்தளாய் பிரதேசத்தில் இருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை அவருடைய பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
No comments