(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியாவில் முடக்கப்பட்ட பகுதிகளுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (23) மாலை கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கனி தலைமையில் ஆரம்பமானது.
கிண்ணியா பிரதேசத்தில் 12 கிராம உத்தியோகத்தர் பிரிவு கடந்த 14ஆம் திகதி முதல் முடக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் எவ்வித வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வந்ததாகவும் அரசாங்கத்தினால் எவ்வித நிவாரணங்களும் வழங்கவில்லை எனவும் பல முறைப்பாடுகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அதனை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் முன்வைத்ததையடுத்து முடக்கப்பட்ட பகுதிகளுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்களை முதற்கட்டமாக வழங்குமாறு அனுமதி வழங்கியதை அடுத்து கிண்ணியா -எகுதார் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மக்களுக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
No comments