Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 2377 பேருக்கு தொற்று!


(அப்துல்சலாம் யாசீம்)

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2377 பேர் கோவிட்  -19 தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 50 பேர் வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர் என்பதுடன் இருவர் வெளிநாட்டவர்கள் ஏனைய 2325 பேரும் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என கோவிட்-19 பரவல் தடுப்புகான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 பரவல் தடுப்புகான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று (27) காலை 6.00 மணியளவில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் அதிகளவில் கொழும்பு மாவட்டத்தில் 573 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கம்பஹா மாவட்டத்தில் 530 தொற்றாளர்களும், கண்டி மாவட்டத்தில் 257 பேரும்,நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கோவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்றுவரை கோவில் -19 தோற்றுக் இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக 172,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பதுடன் அவர்களில் 75193 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்கள் எனவும் தெரியவருகின்றது.

அத்துடன் 142,377 பியர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர் . மேலும் 27398 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இன்று 27 ஆம் திகதி காலை 6 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த ஆயிரத்து 203 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர்.

ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 67 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5947 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.இதேவேளை 12 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த 430 பேர் தனிமைப்படுத்தலை  நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.

மேலும் இன்று (27) காலை 6 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கைக்குள் கோவிட்-19 வைரஸ்  தொற்றுக்கு இலக்காகி இருவர்  உயிரிழந்துள்ளதாகவும், நாட்டில் பதிவான மொத்த கோவிட் -19  மரணங்களின் எண்ணிக்கை 1298 ஆக உயர்வடைந்துள்ளது.

தனிமைப்படுத்தப் பட்டிருந்த பொலிஸ் பிரிவுகள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் பயணத்தடையானது அறிவிப்பு வரையில் நீடிக்கப்படும் எனவும் கோவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.




No comments