திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (27) காலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் சேருநுவர-ஆர்.பீ.04 பகுதியைச் சேர்ந்த பி.எச்.டி.சுவேற்றி சவரிமுத்து (77 வயது) எனவும் தெரியவருகின்றது)
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றபோது யானை தாக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
No comments