Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கிழக்கில் புதிதாக 34 தாதிய உத்தியோகத்தர்கள்!

 


கிழக்கு மாகாணத்தில் புதிதாக 34 தாதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.





கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் வெற்றிடமாக காணப்பட்ட இடங்களுக்கு தேவைக்கேற்ற விதத்தில் தாதியர்களை  அனுப்பி வைத்துள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.


இதேவேளை கிராமப்புற வைத்தியசாலைகளுக்கு தாதியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் குறிப்பாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இரண்டு தாதியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருவதாகவும் இதனால் நோயாளர்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள செல்கின்றபோது தாமதம் ஏற்படுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன் கிண்ணியா- மூதூர் வைத்தியசாலைகளுக்கு தாதியர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

ஆனாலும் அதி கஷ்ட பிரதேச வைத்தியசாலைகளுக்கு தாதியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments