Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

20 வருடங்களின் பின்னர் திருகோணமலை நொச்சிக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்!


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை நொச்சிக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக  எண்ணெய்க்காப்பு நிகழ்வு 20 வருடங்களின் பின்னர்  இன்று (24) இடம் பெற்றது.

வவுனியா முறிப்பு பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சிவகுகநாதக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.


23ஆம் திகதி வெள்ளிக்கிழமை கர்மாரம்பம் இடம்பெற்றதுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.


கடந்த யுத்த காலத்தின் போது நொச்சிக்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் இனந்தெரியாதோரினால் உடைக்கப்பட்ட நிலையில் கடந்த ஆட்சியின்போது புனர் நிர்மாணிக்கப்பட்டு கிராம மக்களின் நிதி பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு 20 வருடங்களின் பின்னர் கும்பாபிஷேகம் இடம்பெற்றுவருவதும்  குறிப்பிடத்தக்கது




No comments