(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை மாத்திரம் 17 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதனடிப்படையில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏழு பேருக்கும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று பேரும் குச்சவெளி பிரதேசத்தில் 4 பேரும் கிண்ணியா பிரதேசத்தில் இருவரும், கந்தளாயில் ஒருவரும் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதிய உத்தியோகத்தர்கள் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் ஒருவருக்கு ஏற்கனவே கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை திருகோணமலை நகர்ப்பகுதியில் நேற்றைய தினம் இனங்காணப்பட்ட 3 பாடசாலைகளிலிருந்து ஆசிரியர் இருவரும் மாணவர் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அனைத்து கல்வி நிலையங்களை மூடுவதற்காக ஆலோசித்து வருவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் மேலும் குறிப்பிட்டார்.
No comments