Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் கோரிக்கைகளை முன்வைத்து இன்றோடு ஒன்பதாவது நாள் உண்ணாவிரதம் நிறைவு


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் கோரிக்கைகளையும்  அரசியல் கைதிகளின் விடுதலையும்,  தமிழ் மக்களின் சம உரிமைகளையும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்தி கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி திருமதி நா. ஆஷா மற்றும் திருமதி இரா. கோசலாதேவி ஆகியோர் திருகோணமலை சிவன் கோயிலின் முன்றலில் முன்னெடுத்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்  செவ்வாய்கிழமை  (23) 09 ஆவது நாளாகவும் தொடர்ந்து வந்த நிலையில் இலங்கைக்கு எதிரான  பிரேரனை நிறைவேற்றப்பட்டதால் உண்ணா விரதம் இருந்தோர் இளநீர் பருகி முடித்துக்கொண்டனர்.


இவை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி கருத்து தெரிவிக்கையில்:


இன்று வரை நாங்கள் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என அவர்களுக்கான நீதி கோரிகையில் புகைப்படங்களுடனும்,  கண்ணீருடனும் வீதிகளில் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கின்றோம்.


இலங்கை அரசாங்கத்தினுடாக எவ்வித தீர்வும் கிடைக்கப் பெறாமையினாலேயே எமது போராட்டங்களை நாங்கள் சர்வதேசத்தை நோக்கி நகர்த்தியிருந்தோம்.

தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படவேண்டும்,  எமது உரிமைகள் மறுக்கப்படுகின்றன, இங்கு நீதி கிடைக்காமையினாலேயே நாங்கள் சர்வதேசத்தை நாடியிருந்தோம்  எமக்கான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றிருந்த நிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரனை நிறைவேற்றப்பட்டுள்ளது.நாம் அதனை வரவேற்கின்றோம் என்றார்.



No comments