Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருமலையில் ஒற்றைச் சிறகு திரைப்படம்


(அப்துல்சலாம் யாசீம்)


சமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவம்பெற்றுள்ள ஒற்றைச் சிறகு திரைப்படம் எதிர்வரும் மாதம் 14ம் திகதி திருகோணமலை நெல்சன் திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (28)
திருகோணமலையில் இடம்பெற்றது.

கந்தையா இராசநாயகம் மற்றும் கந்தையா கோணேஷ்வரன் ஆகியோரது ரொஹாட் பில்ம்ஸ் தயாரிப்பில்  எம் பி ஹீரோஸ் பிச்சர்ஸினால் உருவாக்கப்பட்ட குறித்த திரைப்படமானது திருகோணமலை வெருகல் மற்றும் மாவடிச்சேனை ஆகிய பகுதிகளில்  படமாக்கப்பட்டதாக படத்தின் இயக்குனர் ஜனா மோகேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  
திருகோணமலை, மட்டகளப்பு மற்றும் யாழ் மாவட்ட  கலைஞர்கள் ஒன்றிணைந்து 6மாத உழைப்பில் குறித்த படமானது உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனா மோகேந்திரன் இயக்கத்தில் அகல்யாடேவிட், ஜனா ஆர் ஜே ஒளிப்பதிவில் கிஷாந்த் இசையில் அபிஷேக்கின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள குறித்த படத்தில் சிறப்புதோற்றத்தில் பூர்விகா இராசசிங்கம் நடித்துள்ளதுடன், தவமுரளி தயாரிப்பு குழுத்தலைவராகவும் உதவி இயக்கம் குஜேந்தன், சந்துரு. ஒப்பனை கிருபா, தக்ஷி. ஒலிக்கலவை தினேஷ் நா மற்றும் ஒலிப்பதிவு "அ" கலையகம் கிறேசன் பிரசாத் ஆகியோரது முயட்சியில் உருவாகியுள்ள குறித்த திரைப்படத்தில். 

விதுஷா, கிருபா, அகல்யாடேவிட்கு, ஜேந்தன், ஜனா ஆர் ஜே, பேபி யுதிஷ்டன் தவமுரளி, திலக், சந்துரு, கேனு, உதய், நந்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவம் பெற்றுள்ள இத்திரைப்படம் பெண்கள் மத்தியில் மட்டுமல்ல இளைஞர்கள் மத்தியிலும் பாரிய வரவேற்பை பெறும் என்பதில் தாம் உறுதியாக நம்புவதாக படத்தின் இயக்குனர் இதன்பொது உறுதியளித்தார்.

எதிர்வரும் பங்குனி மாதம் 14ம் திகதி திருகோணமலை நெல்சன் திரையரங்கில் திரையிடபடவுள்ள இத்திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி தொகுப்பு சர்வதேச  மகளீர் தினத்தை முன்னிட்டு  பங்குனி 7ம் திகதி வெளியிடப்படவுள்ளது.

குறித்த திரைப்படத்தில் அதிகளவில் பெண் ஒளிப்பதிவாளர் மேற்கொள்ள பெண் ஒப்பனை கலைஞர் மற்றும் பெண் பாடலாசிரியரும் பணியற்றியுள்ளனர் 
பெண்களை மையப்படுத்தியும் பெண்களை மதிக்கும் ஆண்களைப் பற்றியும் குறித்த படமானது வெளிவரவிருப்பதுடன்  மக்களது ஆதரவை தாம் எதிபார்ப்பதக படக்குழுவினர் தெரிவித்தனர்.

(

No comments