Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருமலை விபத்தில் வைத்தியரின் மகள் படுகாயம்

 


திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியரின் மகள்  படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்



இவ்விபத்து இன்று (21) காலையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார் வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வைத்தியரின் மகள்  படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை- பாலையூற்று பகுதியைச் சேர்ந்த பீ.நிலாசினி (29வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்




No comments