Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(13) சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்த குமார டேப் தலைமையில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வினை திருகோணமலை சிறைச்சாலையும்,சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கமும் இணைந்து மேற்கொண்டதோடு கற்றல் உபகரணங்களை சிறைச்சாலை ஐக்கிய ஒன்றியம் வழங்கியிருந்தது.


இதன் போது கைதிகளின் 75 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.



இந்நிகழ்வில் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் இணைத் தலைவர்களான தயானந்த ஜெயவீர,சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர்,சிறைச்சாலை ஐக்கிய ஒன்றியத்தின் சார்பாக எஸ்.சுகன்,எஸ்.ரவிந்திரன்,பிரதான ஜெயிலர் எல்.எஸ்.பி.லியனகே, திருகோணமலை நவாமிலாஸ் உரிமையாளரும், சமூக சேவையாளருமான எஸ்.எச்.எம். நியாஸ் ஹாஜியார், புனர்வாழ்வு அதிகாரிகள்,பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.








No comments