Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருமலை என் சி வீதியில் நகைக்கடையொன்றில் கொள்ளை


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை என்.சீ வீதியில் நகைக்கடையொன்றில்  நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் இன்றிரவு (10) 7. 15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை என்.சீ.வீதியில் அமைந்துள்ள நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் உட்சென்று பயமுறுத்தி நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு கடல் மார்க்கமாக படகில் ஏறிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நகைக்கடையில் கொள்ளையிடும் காட்சி அடங்கிய சிசிடி காணொளியை பொலிசார் பெற்று விசாரணைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரியவருகின்றது.




No comments