Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

ஹொரவ்பொத்தான-திம்பிரியத்தாவளை முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு

 


(அப்துல்சலாம் யாசீம்)

ஹொரவ்பொத்தான-திம்பிரியத்தாவளை முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டிடம்  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் அவர்களினால் இன்று (16) திறந்து வைக்கப்பட்டது.

1957 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையில் வகுப்பறைகள் பற்றாக்குறையாக காணப்பட்ட நிலையில் இதனை பூர்த்தி செய்யும் நோக்கில் குவைத் அரசாங்கத்தின் நிதி உதவியுடன்  அல்-ஹிமா இஸ்லாமிய நலன்புரி அமைப்பினால் சுமார்  06 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.


இந் நிகழ்வில் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹ்மான், முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஆர்.ஹுஸைன்,பீ.சஹீது
அல் ஹிமா இஸ்லாமிய அமைப்பின் பணிப்பாளர் எம்.ஏ.ஏ.நூறுல்லாஹ்  (நளீமி) சமூக சேவையாளர் தேசமானி,தேசகீர்த்தி ஏ.ஏ.எம்.சியாம் ஹாஜியார்,ஹொரவ்பொத்தான பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.பாசில், வடமத்திய மாகாண இணைப்பாளர் ஏ.எம்.உவைஸ்,எஸ்.எம்.ஜாபீர் மற்றும்  கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது அப்பாடசாலையின் அதிபர் எம்.கே. ஜப்பார் உரையாற்றும்போது இப்பாடசாலை பழமை வாய்ந்த பாடசாலையாகும். இதில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருந்த போதிலும்   இப்பாடசாலைக்கு புதிய ஆசிரியர் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

எனவே இது குறித்து கவனம் எடுத்து இப்பாடசாலைக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


எதிர்காலத்தில் கல்வி கல்லூரிகளில் நியமிக்கப்படுகின்ற புதிய  ஆசிரியர்களை தங்களது பாடசாலைக்கு தயவுசெய்து நியமிக்குமாறும் அதிபர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

No comments