திருகோணமலை-தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணொருவருடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் இன்று (11) 10.30 மணியளவில் தம்பலாகாமம்- 96 ஆம் கட்டைப்பகுதியிலுள்ள விகாரைக்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் சாலியபுர- யுனிட் 13 பகுதியில் வசித்து வரும் கமே கும்புர கெதர லலிதா மெனிகே (51வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு நிலக்கரி வகைகளை ஏற்றுவதற்காக சென்ற டிப்பர் வாகனமே இவ்வாறு வீதியை கடக்க முற்பட்ட பெண்ணுடன் மோதியுள்ளதாகவும் ,விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியான மிகிந்தலை-சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த பத்மபிரிய குலதுங்க (40வயது) என்பவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
No comments