திருகோணமலை மாவட்டத்தில் எட்டு புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
இன்று (06) மாலை அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஐந்து பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருவரும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட தெவனிபியவர பகுதியில் 16 வயதுடைய மாணவரொவருமாக எட்டு பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 45 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது வாகன திருத்தும் இடத்தில் வேலை செய்த 19 வயது மற்றும் 35 வயதுடைய இருவர் இனங் காணப்பட்டதாகவும் அவர்களுடன் நேரடியாக தொடர்புகளை வைத்திருந்த 11 பேரை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜீத் தெரிவித்தார்.
இதேவேளை இன்று புதன்கிழமை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 75 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், 62 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் திருக்கோணமலை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சையொழிபவன் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் திருகோணமலை மாவட்டத்தில் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பொது மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் செயற்பட வேண்டும் எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் கோரியுள்ளார்.
No comments