Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள்


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் தங்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட கொரோனா  சீருடையை வழங்குமாறு கோரி பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இன்று (21)  காலை 9 மணி தொடக்கம் 11.30 மணி வரை போராட்டம் இடம்பெற்றது.

தங்களுக்கு கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு விசேட விடுமுறை வழங்க வேண்டும் எனவும்- தற்காலிக கொரோனா சீருடைகளை மத்திய அரசாங்கம் வழங்கியும் தங்களுக்கு இன்னும் வைத்தியசாலை நிர்வாகம் வழங்கவில்லையெனவும் அதனை உடனடியாக வழங்குமாறு கோரியே இப்பகிஸ்கரிப்பு இடம்பெற்றுள்ளது.


இதில் கடமையிலிருந்த 150க்கும் மேற்பட்ட சிற்றூழியர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொரோனா  விசேட விடுமுறை வாரத்தில் ஒருமுறை வழங்குவதாகவும் தற்காலிக சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து பகிஸ்கரிப்பு நிறைவு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.




No comments